இந்தியா

பிரதமர் அலுவலகத்தில் தீ

செய்திப்பிரிவு

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கம்ப்யூட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ ஏற்பட்டதாக தெரிகிறது.

டெல்லி, தெற்கு பிளாக் கேட் எண் 5 பகுதியில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ளது. அலுவலகத்தின் கீழ்தளத்தில் திடீர் புகை எழுந்தது. உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் 7 தீயணைப்பு வாகனங்கள் உடனே விரைந்ததால், சில நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டது. இதனால் அங்கு இருந்த ஆவணங்கள் எதுவும் சேதமாகவில்லை என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், கம்ப்யூட்டரில் மின்கசிவு காரணமாக இந்த தீ பற்றியிருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக அலாரம் அடித்ததும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. சேதம் ஏதும் இல்லை என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT