இந்தியா

காஷ்மீரில் உருவாகுமா காங். - பிடிபி கூட்டணி?- மூத்த தலைவர் பேட்டி

செய்திப்பிரிவு

காஷ்மீரில் காங்கிரஸ் - மக்கள் ஜனநாயக கட்சிகளுக்கு இடையே தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி ஏற்படுமா என்பது குறித்து பிடிபி கட்சியின் மூத்த தலைவர் முசாபர் ஹூசைன் பெய்க் தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "பாஜகவுடன் கூட்டனி சேர்வதைவிட காங்கிரஸ் கட்சியுடன் உறவு ஏற்படுத்திக் கொள்வது எங்களுக்கு எளிது.

இருப்பினும் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் முடிவே இறுதியானது. அவர்கள் காங்கிரஸ் கூட்டணியைவிட பாஜக கூட்டணி சாதகமாக இருக்குமென கூறினால் அவ்வாறே பாஜக கூட்டணி அமைக்கப்படும். நாளை, மக்கள் ஜனநாயக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அதில் முக்கிய முடிவுகள் எட்டப்படும்" என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT