அகமதாபாத்தில் அசரம் பாபுவின் ஆஸ்ரமத்தில் இருந்தபோது 1997 முதல் 2006ம் ஆண்டு வரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வந்ததாக அசரம் பாபு மீது பெண்மணி ஒருவர் கடந்த ஆண்டு புகார் செய்திருந்தார்.
அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அசரம் பாபு ராஜஸ்தானில் சிறை வைக்கப் பட்டுள்ளார்.
இந்நிலையில், புகார் செய்த அந்தப் பெண்மணி உறவினர் இல்ல திருமணத்துக்குச் செலவதாகக் கூறி, தன் கணவர் மற்றும் மகனுடன் திடீரென்று மாயமானார். அவரை போலீஸார் கடந்த சில நாட்களாகத் தேடி வந்தனர்.
இதற்கிடையே நேற்று அந்தப் பெண் சூரத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஆஜரானார். தனக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப் பால் தான் நிம்மதி இழந்துவிட்ட தால் திடீரென்று தலைமறைவாகி விட்டதாக அந்தப் பெண் கூறியுள்ளார்.