தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்-இந்தி அறிஞர் முனைவர் எம். கோவிந்தராஜனுக்கு உத்தரப் பிரதேச அரசின் ‘சௌஹார்த புரஸ்கார்’ இலக்கிய விருது வழங்கப்பட உள்ளது.
உ.பி. அரசின் மொழி இலக்கிய அமைப்பான ‘இந்தி சன்ஸ்தான்’ சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வேற்று மொழிகளில் இந்தி வழியாக தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழிவகுக்கும் அறிஞர்களுக்கு ‘சௌஹார்த புரஸ்கார்’ எனும் விருதும் ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
2013-ம் ஆண்டு தமிழ் மொழிக் கான விருது, பாஷா சங்க பொதுச் செயலாளர் எம்.கோவிந்த ராஜனுக்கு வழங்கப்பட உள்ளது. அவருக்கு லக்னோவில் டிசம்பர் 7 -ம் தேதி நடைபெறும் விழாவில் சமாஜ்வாதி தலைவர் முலாயம்சிங் விருதை வழங்குகிறார்.
கோவிந்தராஜன் இதற்கு முன் அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளின் மூலம் 300-க்கும் மேற்பட்ட பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றவர். 30-க்கும் மேற்பட்ட தமிழ்-இந்தி நூல்களை இவர் எழுதியுள்ளார்.