இந்தியா

தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை: காஷ்மீரில் 102 தீவிரவாதி, 29 வீரர்கள் பலி

பிடிஐ

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்த ஆண்டில் (2014) தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் மொத்தம் 102 தீவிரவாதிகளும் 29 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை மக்கள் தொடர்பு அதிகாரி கர்னல் எஸ்.டி.கோஸ்வாமி கூறியதாவது:

நேருக்குநேர் போரிட துணிவில் லாத பாகிஸ்தான், தீவிரவாதிகள் மூலம் மறைமுகமாக தாக்குதல் நடத்தி வருகிறது. மாநிலத்தில் நடை பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலை சீர்குலைப்பதற்காக, சர்வதேச எல் லையில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். ஆனால் இந்த முயற்சியை ராணுவம் முறியடித் தது. ஜம்மு-காஷ்மீரில் இந்த ஆண்டில் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் 102 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 47 தீவிரவாதிகள் உயிருடன் பிடிபட்டனர். ஒருவர் சரணடைந்தார்.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களின் மூலம் 394 வகையான ஆயுதங்களை ராணுவம் கைப்பற்றி உள்ளது.

தீவிரவாதிகள் 15 ஐஇடி வகை வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதை ராணுவம் முன்கூட்டியே அறிந்து செயலிழக்கச் செய்ததன் மூலம் அசம்பாவித சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளன.

தீவிரவாதிகளுடனான சண்டை யில் 29 வீரர்கள் பலியாயினர். 45 பேர் காயமடைந்தனர்.

இந்த ஆண்டில் பாகிஸ்தான் ராணுவம் 562 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான (2003) பிறகு கடந்த 11 ஆண்டுகளில் இது அதிகபட்சம் ஆகும். இந்தத் தாக்குதலில் 5 வீரர்கள் உட்பட 19 பேர் பலியாகி உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT