இந்தியா

பிரதமர் மோடியுடன் ஆந்திர ஆளுநர் சந்திப்பு

செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடியை ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களின் ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன் சந்தித்தார். டெல்லியில், பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர், "இரண்டு மாநிலங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலவரம் திருப்திகரமாக இருப்பதாக ஆளுநரிடம் எடுத்துரைத்தேன். அத்துடன், இரு மாநில முதல்வர்களும் சிறப்பாக செயல்படுவதாகவும் கூறினேன். மற்றபடி இது வழக்கமான சந்திப்பு" என்றார்.

தெலங்கானா, ஐதராபாத் ஆகிய இரு மாநிலங்களிலும் தனித்தனியாக இடைநிலை பொதுத் தேர்வு நடத்தப்படுவது தொடர்பான கேள்விக்கு, "மாணவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் நலன் காக்கப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT