மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அதில், தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்து வருவதாகவும் அதை அதிகரித்து வழங்க உத்தர விட வேண்டும் என்றும் கோரியிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் ஆர்.கே.அகர்வால் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் ரிட் மனு தாக்கல் செய்வது சரியான அணுகுமுறை இல்லை. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக சிவில் நீதி மன்றத்தை அணுகுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஜெயலலிதா தமிழக முதல்வ ராக இருந்தபோது, தமிழக அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டது. அதில், “ரேஷன் அட்டைகளின் எண்ணிக் கையின் அடிப்படையில் மாதத் துக்கு 65,140 லிட்டர் மண்ணெண் ணெயை மத்திய அரசிடமிருந்து பெற உரிமை தமிழகத்துக்கு உரிமை இருக்கிறது. எனினும், முந்தைய ஆட்சியின்போது மண் ணெண்ணெய் ஒதுக்கீடு படிப்படி யாகக் குறைக்கப்பட்டு இப்போது 29,056 கிலோ லிட்டர் மட்டுமே தமிழகத்துக்கு வழங்கப்படுகிறது. எனவே, தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டிருந்தது.