சுவாசக்குழாய் தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து அண்மையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாக்குழாயில் தொற்று ஏற்பட்டது மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டது. குளிர்காலங்களில் வழக்கமாக தாக்கக்கூடிய தொற்றே என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர் அனூப் குமார் பாசு, "சோனியா உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும். முழுவதுமாக உடல்நலன் தேறும் வரை அவர் மருத்துவமனையிலேயே இருப்பார்" என கூறினார்.