இந்தியா

வாஜ்பாய் பிறந்தநாள் தேசிய நல்ல நிர்வாக தினமாக கொண்டாடப்படும்: மோடி

செய்திப்பிரிவு

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் தேசிய 'நல்ல நிர்வாக' தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் மோடி இதனை அறிவித்தார்.

பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் மோடி பேசியதாவது: "டிசம்பர் 25-ம் தேதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினத்தை தேசிய 'நல்ல நிர்வாக' தினமாக கொண்டாட வேண்டும். பாஜக எம்.பி.க்கள் அனைவரும் தூய்மை இந்தியா திட்டத்துக்காக தங்கள் தொகுதியில் தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாக செயல்படுத்த வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக சார்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். 200-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என கூறினார்.

SCROLL FOR NEXT