கர்நாடக மாநிலம்,பெல்காமில், சுட்கட்டி மற்றும் உட்கேரிக்கு இடையே, இன்று அதிகாலை வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது ஏற்பட்ட விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இறந்தனர். ஓட்டுனர் உட்பட எட்டு பேர் பலத்த காயமடைந்தனர்.
முதல் கட்ட விசாரணையில், ஓட்டுனரின் தூக்கமின்மையாலும், வாகனத்தை வேகமாக ஓட்டியதாலும் விபத்து ஏற்ப்பட்டிருக்கக் கூடும் என டோட்வாடின் உதவி ஆய்வாளர் எஸ்.வி.நாயக் கூறினார்.
விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் பலியானவர்களின் உடல்கள், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.