இந்தியா

அசாமில் பேருந்து - லாரி மோதியதில் 26 மாணவர்கள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

காஸிரங்கா: அசாம் மாநிலத்தில் பேருந்து, லாரி மோதிக் கொண்ட விபத்​தில் 26 மாணவர்கள் உயி​ரிழந்​த​தாக அஞ்சப்படுகிறது.

அசாம் மாநிலம் காஸிரங்கா அருகே ராங்​கஜன் பகுதி​யில் நேற்று மினி பேருந்​தும், வேக​மாக வந்த லாரியும் மோதிக் கொண்​டன. மினி பேருந்து போகாகாட் பகுதி​யி​லிருந்து நகோவானை நோக்​கிச் சென்று கொண்​டிருந்​த​போது இந்த விபத்து நடந்​துள்​ளது.

பேருந்​தில் 45-க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் இருந்​துள்​ளனர். சம்​பவம் அறிந்த போலீ​ஸாரும், தீயணைப்​புப் படை​யினரும் விரைந்து வந்து பேருந்​தில் சிக்​கிக் கொண்​டிருந்​தவர்​களை மீட்டனர்.

இந்த விபத்​தில் 26 பேர் உயி​ரிழந்​த​தாக அஞ்​சப்​படு​கிறது. மேலும் ஏராளமானோர் காயமடைந்​துள்​ளனர். விபத்​தில் பலர் படுகாயம் அடைந்​துள்​ள​தால் உயி​ரிழப்பு அதி​கரிக்​கக்​கூடும் எனத் தெரிகிறது. பேருந்​தும் லாரியும் வேக​மாக மோதிக் கொண்​ட​தால் அந்த பேருந்து முழு​வது​மாக உருக்​குலைந்து விட்​டது.

இது​குறித்து கோலாகாட் பகுதி மூத்த போலீஸ் கண்​காணிப்​பாளர் ஸ்​வப்​னாநீல் தேகா கூறும்​போது, “பேருந்​தி​லிருந்து ஏராளமான உடல்​களை மீட்​டுள்​ளோம். படுகாயமடைந்த 20-க்​கும் மேற்பட்டோர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.

அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெளி​யிட்​டுள்ள இரங்​கல் செய்​தி​யில், “காஸிரங்கா பூங்கா அருகே நடந்த விபத்து குறித்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தா​ருக்கு ஆறுதலை தெரிவித்​துக் கொள்​கிறேன்,” என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT