இந்தியா

கோழைத்தனமான செயல்: தாலிபான் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

செய்திப்பிரிவு

பெஷாவரில் உள்ள பள்ளி ஒன்றில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 84 குழந்தைகள் உட்பட 126 பேர் பலியான சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டரில் இது பற்றி பதிவிடும் போது, “உயிரிழந்தவர்களை நோக்கி எனது இருதயம் செல்கிறது. அவர்கள் வலியை நாம் பகிரிந்து கொள்கிறோம். எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

விவரிக்க முடியாத அளவுக்கு மூர்க்கமான இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட அப்பாவி மனித உயிர்கள் பலியாகியுள்ளன.

பெஷாவரில் நடந்த இந்த கோழைத்தனமான தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன்” இவ்வாறு கூறியுள்ளார் பிரதமர் மோடி.

SCROLL FOR NEXT