இந்தியா

எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறல்

பிடிஐ

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நேற்று 2 முறை தாக்குதல் நடத்தியது.

இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜம்மு மாவட்டம் ஆர்னியா பகுதியில் உள்ள விக்ரமன் நிலைகள் மீது நேற்று முன்தினம் இரவு சிறிய ரக ஆயுதங்களைக் கொண்டு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு நமது ராணுவம் பதிலடி கொடுத்தது. நேற்று அதிகாலை 1.30 மணி வரை நீடித்த இந்தத் தாக்குதலில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதுபோல கதுவா மாவட்டம் ஹிராநகர் பகுதியில் உள்ள ஜபோவால் நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கும் பதிலடி தரப்பட்டது. இந்தத் தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த 4 நாட்களில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 4 முறை தாக்குதல் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT