இந்தியா

ஹபிஸ், தாவூத் இப்ராஹிமை இந்தியாவிடம் ஒப்படையுங்கள்: பாகிஸ்தானுக்கு அமைச்சர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மும்பையில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம், ஹபீஸ் சயீத் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைசச்ர் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:

தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் உறுதியாக இருக்கும்பட்சத்தில், மும்பையில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம், ஹபீஸ் சயீத் ஆகியோரை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.

உலக அளவில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதில் ஹபீஸ் சயீத் முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் மனித குலத்தின் விரோதி.

பாகிஸ்தான் பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, தீவிரவாதத்துக்கு எதிராக கடுமை யான நடவடிக்கைகளை மேற் கொள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.

SCROLL FOR NEXT