இந்தியா

ரூ. 2 கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகள் அழிப்பு

செய்திப்பிரிவு

விசாகப்பட்டினத்தில் நேற்று ரூ. 2 கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகளை, கலால் துறை அதிகாரிகள் தீ வைத்து அழித்தனர்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள சரியாபல்லி, பொட்டபூட் பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா செடிகள் வளர்ப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கலால் துறை போலீஸார் மற்றும் ஆயுதப்படையினர் நேற்று சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு 22 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 2 கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகளை வளர்த்து வருவது தெரிய வந்தது. உடனடியாக சுமார் 200 பேர் இந்த செடிகளை தீ வைத்து அழித்தனர்.

SCROLL FOR NEXT