இந்தியா

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு

செய்திப்பிரிவு

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.

நாடாளுமன்றத்தில் சமூக நீதித்துறை இணையமைச்சர் விஜய் சம்ப்லா பதிலளிக்கும்போது, "தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு (என்சிஎஸ்சி) நடப்பாண்டில் உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழகத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான புகார்கள் பெறப்பட்டுள்ளன. நடப்பாண்டில் அக்டோபர் மாதம் வரை மொத்தம் 12,566 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேசத்திலிருந்து 2,493 புகார்கள் பெறப்பட்டு, 1,500க்கும் அதிகமான புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2,078 புகார்கள் பெறப்பட்டு 1,558 புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து மிகக்குறைந்த புகார்கள் வரப்பெற்றுள்ளன" என்றார்.

SCROLL FOR NEXT