இந்தியா

உயிரியல் பூங்காவில் பாம்பு கடித்து புலி பலி

பிடிஐ

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கமலா நேரு உயிரியல் பூங்காவில் நாகப் பாம்பு ஒன்று கடித்ததால் புலி உயிரிழந்தது.

சில நாட்களுக்கு முன்பு பிலாய் பகுதியில் இருந்து 'ரஜ்ஜன்' எனும் பெயருடைய வெள்ளைப் புலி இந்த உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. மூன்று வயதான இந்தப் புலியின் கூண்டுக்குள் நேற்று காலை காயமடைந்த நிலையில் நாகப் பாம்பு ஒன்று இருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி யடைந்த உயிரியல் பூங்கா அதிகாரிகள் புலியின் கூண்டை சோதனையிட்டபோது புலி இறந்துகிடந்தது தெரியவந்தது.

"கூண்டுக்குள் நுழைந்த பாம்புக்கும் புலிக்கும் இடையில் சண்டை ஏற்பட்டிருக்கலாம். அப்போது பாம்பு கடித்து புலி இறந்திருக்கலாம்’’என்று உயிரியல் பூங்கா பொறுப்பாளர் உத்தம் யாதவ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT