இந்தியா

கட்டபஞ்சாயத்துகள் சட்டவிரோதமானவை: மத்திய அமைச்சர் கருத்து

பிடிஐ

கட்டபஞ்சாயத்துகள் சட்ட விரோதமானவை; அரசியல் சாசனச் சட்டத்துக்கு புறம்பானவை என்று மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.

மக்களவையில் நேற்று நடை பெற்ற விவாதத்தின்போது மேற்கு வங்கத்தின் கிராமப்புறங்களில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத் துகள் குறித்து பிஜு ஜனதா தள எம்.பி. ரவீந்திர குமார் ஜேனா கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறும்போது, “கட்டப் பஞ்சாயத்துகள் சட்டவிரோத மானவை; அரசியல் சாசனச் சட்டத் துக்கு புறம்பானவை. இத்தகைய அமைப்புகள் மீது மாநில அரசு கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்கள் சம்பந்தமான பிரச் சினைகள் தொடர்பான வழக்கை விரைந்து முடிக்க வசதியாக பெண்கள் நீதிமன்றத்தை தொடங் குவது தொடர்பாக மாநில அரசுகளுக்கு விரைவில் கடிதம் எழுதவுள்ளேன்.

ஏழைகள், நலிவடைந்த பிரி வினருக்கான இலவச சட்ட உதவி மையங்களை ஏற்படுத்த அனைத்து உதவிகளையும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அளிக்கும்.

சட்ட சேவைகள் சட்டத்தின் படி எஸ்.சி., எஸ்.டி., கடத்தலுக்குள் ளான பெண்கள் மற்றும் குழந்தை கள், மாற்றுத்திறனாளி, தொழி லாளி உள்ளிட்டோர் இலவச சட்ட உதவியைப் பெற தகுதி உடை யவர்களாவர். இவ்வாறு சதானந்த கவுடா கூறினார்.

SCROLL FOR NEXT