காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து இன்று (செவ்வாய்கிழமை) வீடு திரும்பினார்.
68 வயதான சோனியா காந்தி கடந்த வாரம் வியாழக்கிழமையன்று டெல்லி ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டார்.
சுவாசக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அவர் வீடு திரும்பினார். மேலும் சில நாட்களுக்கு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர்.