இந்தியா

காஷ்மீர் வெள்ளம்: துறைமுக ஊழியர்கள் ரூ.29 லட்சம் உதவி

செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக ஏராளமான உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் ஏற்பட்டது.

அந்த மாநில மக்களுக்கு உதவும்படி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்விடுத்தார்.

இதை ஏற்று, சென்னை துறைமுக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை நன்கொடையாக வழங்கினர்.

இதன் மூலம் கிடைத்த ரூ.29.01 லட்சம் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. சென்னை துறைமுகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT