நாடாளுமன்றக் குளிர்காலக் கூட் டத்தொடர் நேற்று நிறைவடைந்தது. இரு அவைகளும் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப் பட்டன.
கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந் தது. இந்த கூட்டத்தொடரில் மக்களவையில் மொத்தம் 129 மணி நேரம் பணிகள் நடைபெற்றன. எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கைகள் மொத்தம் 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேசும்போது, “தொழிலாளர் நலம், மனிதவளம், நிலக்கரி துறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த 18 மசோ தாக்கள் நிறைவேற்றப்பட்டன. இது ஒரு சாதனையாகும்.
பாகிஸ்தானில் பள்ளிக் குழந் தைகள் மீது நடத்தப்பட்ட தாக்கு தல் சம்பவத்துக்கும், மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஜகியுர் ரஹ்மான் லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதற்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன” என்றார்.
புத்தாண்டு வாழ்த்து
இறுதியில் உறுப்பினர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற் றும் ஆங்கில புத்தாண்டு வாழ்த் துகளை தெரிவித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், வரும் புதிய ஆண்டில் இந்தியாவில் ஜனநாயகம் மேலும் வலுவடையும் என நம்புவதாகக் கூறினார். அப்போது, அதிமுக உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதியில் இருந்து பொங்கலுக்கும் வாழ்த்து என்று குரல் எழுப்பப்பட்டது.
இதையடுத்து அவை நடவடிக் கைகள் மறு தேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைக்கப்பட்டன.
மாநிலங்களவையில்…
இதேபோல், மாநிலங்களவை யும் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மொத்தம் 22 அமர்வுகள் நடைபெற்றதில், 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட் டுள்ளன. கருப்பு பணம் மீட்பு விவகாரம், பாஜக உறுப்பினர்களின் சர்ச்சைக்குரிய பேச்சு, மதமாற்றம் உட்பட பல் வேறு பிரச்சினைகள் காரணமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட தால், 62 மணி நேரம் எந்தவிதமான பணிகளும் நடைபெறவில்லை. மொத்தம் 76 மணி நேரம் மட்டுமே விவாதங்கள் நடைபெற்றன.
காப்பீடு, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான 2 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வில்லை. மாநிலங்களவையில் அவைத் தலைவர் ஹமீது அன்சாரி கூறும்போது, “இந்த கூட்டத் தொடரில் புதிய மசோதா ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு தாக்கல் செய்த இரு மசோ தாக்கள் வாபஸ் பெறப்பட்டுள் ளன. கப்பல் போக்குவரத்து, தொழி லாளர் சட்டம் உட்பட 12 மசோ தாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அவையில் ஏற்பட்ட அமளியால் மொத்தம் 14 நாட்கள் கேள்வி நேரத்தை நடத்த முடியாமல் போனது” என்றார்.