நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே சமச்சீரான மறை முக வரி கட்டமைப்பை வழங்கக் கூடிய பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா அறிமுகம் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதிய மைச்சர் அருண் ஜேட்லி டெல்லியில் நேற்று கூறும்போது, “ஜிஎஸ்டி மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்ய முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. வரும் 12-ம் தேதி நடைபெற உள்ள மாநில நிதியமைச்சர்களின் அதிகார மளிக்கப்பட்ட குழு கூட்டத்தில் வரைவு மசோதா குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். அதன் பிறகு மத்திய அமைச்சரவை அதை பரிசீலிக்க உள்ளது” என்றார்.
2016-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான வரைவு மசோதா தொடர்பாக மாநில அரசுகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக புதிய நிதிக் குழு அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இப்போது உற்பத்தி வரி, சேவை வரி ஆகியவை மத்திய அரசாலும், வாட் வரி மாநில அரசு களாலும், இதுதவிர உள்ளூர் வரிகளும் பல்வேறு நிலைகளில் மறைமுக வரிகளாக வசூலிக்கப் படுகின்றன. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்தால் இவை அனைத்தும் ரத்து செய்யப் படும். இதனால் தங்கள் வருவாய் ஆதாரம் பாதிக்கப்படும் என மாநில அரசுகள் கவலை தெரி வித்து வருகின்றன.