இந்தியா

பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் ‘பண்ணையாரும் பத்மினியும்’ திரைப்படத்துக்கு விருது

இரா.வினோத்

பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்ப‌டங் களுக்கான பிரிவில் எஸ்.யூ.அருண்குமார் இயக்கத்தில் வெளியான `பண்ணையாரும் பத்மினியும்' படத்துக்கு விருது கிடைத்துள்ளது. பல ஆண்டு களுக்குப் பிறகு தமிழ் திரைப் படத்துக்கு கர்நாடக அரசின் விருது கிடைத்துள்ளது.

கர்நாடக சலனசித்ராவின் 7-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா கடந்த 4-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெற்றது. 44 நாடுகளைச் சேர்ந்த 170 திரைப் படங்கள் 10 திரையரங்குகளில் திரையிடப்பட்டன. இதில் எஸ்.யூ.அருண்குமார் இயக்கிய `பண்ணையாரும் பத்மினியும்', ஜி.பிரம்மா இயக்கிய `குற்றம் கடிதல்' ஆகிய இரு தமிழ் திரைப் படங்களும் திரையிடப்பட்டன. இரு படங்களுக்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் தேர்வான திரைப்படங்களில் சிறந்த கன்னட திரைப்படம், இந்திய திரைப்படம், ஆசிய திரைப்படம், உலக திரைப் படம் ஆகிய‌ பிரிவுகளில் தலா 3 சிறந்த திரைப்படங்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன‌.

ரூ.1 லட்சம் பரிசு

இதன் நிறைவு விழா கடந்த வியாழக்கிழமை இரவு பெங்களூருவில் கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா தலைமையில் நடைபெற்றது. கன்னட திரைப் படப் பிரிவில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட `பிரக்குருதி', `ஆகாசி பார்லர்', `ஹஜ்' படங்களின் இயக்குநர்களுக்கு விருதும், தலா ஒரு லட்சம் பரிசும் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து இந்திய திரைப்படங்களுக்கான பிரிவில் `அன் டூ டஸ்க் (மலையாளம்), எல்லோ (மராத்தி) மற்றும் தமிழில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த `பண்ணையாரும் பத்மினியும்' திரைப்படங்களுக்கு விருது அறி விக்கப்பட்டது. இதன்படி, இயக் குநர் எஸ்.யூ.அருண்குமாருக்கு விருதும், ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து இயக்குநர் எஸ்.யூ.அருண்குமார், `தி இந்து'விடம் கூறியதாவது: பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம் செக் குடியரசு, டெல்லி உள்ளிட்ட 6 திரைப்பட விழாக்களில் பலரு டைய பாராட்டுகளை பெற்றது. இந்த திரைப்படத்துக்கு பெங்க ளூரு திரைப்பட விழாவில் விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத் தில் அங்கமாய் இருந்த அனை வருக்கும் நன்றி. எனது அடுத்த படத்திலும் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார் என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT