இந்தியா

பிரதமர் தலைமையில் இன்று மாநில முதல்வர்கள் மாநாடு: திட்ட கமிஷன் கலைக்கப்படுமா?

பிடிஐ

மாநில முதல்வர்கள் மாநாடு டெல்லியில் இன்று நடைபெறு கிறது. இதில் திட்ட கமிஷனுக்கு பதிலாக புதிய அமைப்பை உரு வாக்குவது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார்.

முதல் சுதந்திர தின உரையின் போது பேசிய பிரதமர் மோடி, 64 ஆண்டுகால திட்ட கமிஷன் கலைத்துவிட்டு இன்றைய காலத் துக்கு ஏற்ற புதிய நிதி அமைப்பு உருவாக்கப்படும் என்று அறி வித்தார்.

இதுதொடர்பாக ஆலோசனை நடத்த டெல்லியில் இன்று முதல் வர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் முதல்வர்கள் தங்கள் கருத்துகளை பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொள்ள உள்ளனர். இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறிய போது, மாநிலங்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வது மத்திய அரசின் பிரதான கொள் கைகளில் ஒன்றாகும். மாநில அரசுகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்றார்.

முதல்வர்கள் மாநாட்டின் தொடக்கத்தில் திட்ட கமிஷனின் செயலாளர் சிந்து கெல்லர், புதிய நிதி அமைப்பின் செயல் பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்க உள்ளார். அதைத் தொடர்ந்து மாநில முதல்வர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க உள்ளனர்.

புதிய அமைப்பில் நிதித்துறை, சுற்றுச்சூழல், இன்ஜினீயரிங், அறிவியல் உட்பட பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் 8 முதல் 10 பேர் இடம்பெறுவார்கள். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் மாநில பிரதிநிதிகளாக இருப்பார்கள். புதிய அமைப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைவராக இருப் பார். இந்த அமைப்பு அனைத்து திட்டப் பணிகளையும் மேற்பார்வை யிட்டு ஆய்வு செய்யும் என்று மத்திய நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்தியில் கடந்த மே மாதம் புதிய அரசு பதவியேற்ற பிறகு திட்ட கமிஷனின் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய் தனர்.

SCROLL FOR NEXT