கர்நாடக மாநிலம் மங்களூரு மாவட்டத்தில் தர்மஸ்தலா மஞ்சு நாதா கோயில், கத்ரி மஞ்சுநாதா கோயில், கோகர்நாதா கோயில், மங்களாதேவி கோயில், கொல்லூர் மூகாம்பிகை கோயில் உள்ளிட்ட பழைமையான கோயில்கள் உள்ளன. இங்கு சிறப்பு பூஜை, யாகம், ஹோமம் மேற்கொள்ளும் பிரபல ஜோதிடர்களும், சாமியார்களும் அதிகளவில் வசிக்கின் றனர். இவர்கள் வெளிநாடு களைச் சேர்ந்த செல்வந்தர் களுக்கும் யாகம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஓமன் சுல்தான் கபூஸ் பின் சையது அல் (74) குடல் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சுல்தான் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைவதற் காக வளைகுடா நாடுகளில் இஸ்லாமிய மதத் தலைவர்கள் சிறப்பு பிரார்த்தனைகளை மேற் கொண்டுள்ளனர். இதனிடையே ஓமன் நாட்டில் தொழில் செய்து வரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் மூலம் மங்களூருவில் சிறப்பு யாகம் நடத்த ஓமன் ராஜ குடும்பம் ஏற்பாடு செய்தது.
இதையடுத்து கடந்த மாதம் மங்களூரு அருகே உள்ள அன்னபூர்னேஸ்வரி கோயிலில் ஜெயராம் ஹெக்டே என்ற ஜோதிடர் தலைமையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 14 ஜோதிடர்கள் சுல்தான் மன்னருக்காக 5 நாட்கள் சந்திகா யாகம் மேற் கொண்டனர். அதன்பின் 3 வித மான இனிப்புகள் அடங்கிய பிரசாதம் ஓமன் சுல்தானுக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஓமன் சுல்தான் குணமடைவதற் காக மங்களூருவைச் சேர்ந்த ஜோதிடர் சந்திரசேகர சுவாமி தலைமையில் 22 ஜோதிடர்கள் கடந்த மாதம் 17-ம் தேதி மஸ்கட் சென்றனர். மஸ்கட்டிலிருந்து 41 கி.மீ. தொலைவில் உள்ள பர்கா நகரில் தங்கி இருந்து 14 நாட்கள் தொடர் யாகம் நடத்தியுள்ளனர்.
அப்போது கன யாகம், தனவந்திரி யாகம், பூர்ண நவகிரஹ சாந்தி யாகம், மஹா மிருத்யுஞ்சயா யாகம், மஹா விஷ்ணு யாகம், சந்திகா யாகம் உள்ளிட்ட 14 வகையான யாகங்களை நடத்தினர். இதில் ஓமன் சுல்தான் குடும்பத்தினர், இந்திய செல்வந்தர்களும் கலந்து கொண்டதாக சந்திரசேகர சுவாமி தெரிவித்துள்ளார்.
கோடிகளில் புரளும் ஜோதிடர்கள்
மங்களூரு ஜோதிடர்கள் இத்தகைய யாகங்களை மேற் கொள்வதற்கு கோடிக்கணக்கில் கட்டணம் வசூலிக்கின்றனர். வெளி நாடுகளுக்குச் சென்று யாகம் செய்ய விமான கட்டணம், தங்குமிடம், உணவு ஆகியவற்றையும் சம்பந்தப்பட்ட வர்களே செய்து தருகின்றனர்.
ஜோதிடர் சந்திரசேகர சுவாமி, கடந்த மார்ச் மாதம் நரேந்திர மோடி பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக சந்திகா யாகம் வளர்த்தார். அவரது தீவிர யாகத்தி னாலே மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டதாக நம்பப்படு கிறது. இதனால் மாதந்தோறும் மோடி யின் பெயரில் சிறப்பு பூஜை மேற்கொள்ளுமாறு சந்திரசேகர சுவாமியிடம் மோடிக்கு நெருக் கமானவர்கள் கேட்டுள்ளனர்.