இந்தியா

5 இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு

செய்திப்பிரிவு

திருவள்ளுவர் எழுதிய திருக்குறளின் புகழை பரப்பும் பொருட்டு அது, ஆங்கிலம், ஐந்து இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்களவையில் கோவை தொகுதி அதிமுக உறுப்பினர் பி.நாகராஜன் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்:

இந்திய ஒருமைப்பாட்டின் சிறந்த நாகரிகத்தை பரப்பும் பொருட்டும் சமூகத்தின் பயனுக்காகவும் பழம்பெரும் தமிழ் இலக்கியமான திருக்குறள், சென்னையில் உள்ள மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனம் சார்பில் ஆங்கிலத்தில்18 சுருக்கங்களாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இத்துடன் தெலுங்கு, கன் னடம், பஞ்சாபி, குஜராத்தி மற்றும் மணிப்புரி ஆகிய இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் திருக்குறளை கைப்பேசி களில் ஆங்கிலத்தில் படிக்கும் வகையிலும் வெளியிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT