இந்தியா

நதிகள் இணைப்பு: கேரளா எதிர்ப்பு

பிடிஐ

கேரள மாநில சட்டப்பேரவை யில் நேற்று முதல்வர் உம்மன் சாண்டி பேசியதாவது:

பம்பை, அச்சன்கோவில், வைப்பாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை என்ன விலை கொடுத்தாலும் தடுத்து நிறுத்துவோம். கேரள அரசின் அழுத்தத்தால் தேசிய நதிகள் மேம்பாட்டு அமைப் பின் முன்னுரிமை பட்டியலில் இருந்து இத்திட்டம் நீக்கப் பட்டுள்ளது.

பம்பை, அச்சன்கோவில் நதி களில் கூடுதல் தண்ணீர் இல்லை என்று நிபுணர்கள் ஆய்வறிக்கை அளித்துள்ளனர். எனவே அந்த நதிகளை வைப்பாறுடன் இணைக்கக் கூடாது என்று போராடி வருகிறோம். இத்திட்டத்தால் இயற்கை பேரிடர்கள் ஏற்படும் ஆபத்தும் உள்ளது.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் சில பலவீனமான அம்சங்கள் உள்ளன. எனினும் இந்த விவகாரம் குறித்து கவலைப்பட தேவையில்லை. நதிகள் விவகாரத்தில் மாநில அரசு களின் ஒப்புதல் இன்றி மத்திய அரசு நடவடிக்கை எடுக்காது. கேரளாவின் நலன்களைப் பாதுகாக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT