ஸ்ரீநகரில் நடைபெறும் பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜம்முவிலிருந்து 2 ரயில்கள் நிறைய மக்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர் என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடியின் பிரசாரக் கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதற்கு முன்னதாக தனது ட்விட்டரில் இக்கருத்தை ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
அந்த ட்வீட்டில், "ஜம்முவின் பானிகால் பகுதியில் இருந்து 2 ரயில்களில் மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், "கூட்டத்தை காட்டுவதற்காக சில தொண்டர்களை அனுப்பும்படி காங்கிரஸ் கட்சியிடம்கூட பாஜக கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியலில் மட்டும்தான் இத்தகைய விநோதங்கள் நடைபெறும்" என குறிப்பிட்டுள்ளார்.