இந்தியா

ஜம்மு காஷ்மீர் அரசியலில் புதிய திருப்பம்: பிடிபி, காங்கிரஸ், என்சி மெகா கூட்டணி

செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியுடன் (என்சி) இணைந்து மெகா கூட்டணி அமைக்க மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) முடிவு செய்துள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பாஜகவுடன் கைகோர்க்க கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியதே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.

87 உறுப்பினர்கள் கொண்ட காஷ்மீர் சட்டப்பேரவையில் பிடிபி 28, பாஜக 25, என்.சி. 15, காங்கிரஸ் 12 இடங்களிலும் மீதம் உள்ள 7 இடங்களில் பிற கட்சிகள், சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சியமைக்க 44 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், இதுவரை எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை.

தனிப்பெரும் கட்சியாக உருவெ டுத்துள்ள பிடிபி, பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கிடையே, பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் முப்தி முகமது சையது கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தினார். பாஜக வுடன் கூட்டணி அமைக்க எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித் ததாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி கூறும்போது, “தனிப்பெரும் கட்சி யாக உருவெடுத்துள்ள பிடிபிக்கு ஆட்சி அமைக்க சட்டப்படி உரிமை உள்ளது. மாநிலத்தில் மதச்சார்பற்ற ஆட்சி அமைய ஆக்கப்பூர்வமான ஆதரவு அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT