முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பைக் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ள தாவது:
முல்லைப் பெரியாறு அணை யில் நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு கேரளம் பலவிதங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 17-ம் தேதி கேரளத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் சில கேரளப் பத்திரி கையாளர்களுடன் அனுமதி யின்றி முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிட வந்துள்ளார். அவரைத் தடுக்க முயன்ற பொறியாளருடன் கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர். எம்.எல்.ஏ.வின் பாதுகாப்புக்கு வந்த கேரள போலீஸாரும் இந்தச் செயலைத் தடுக்க முன் வரவில்லை.
ஆகவே, அணையின் பாது காப்பு கருதி அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
நவ. 26-ல் கேரளத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்
கேரளத்தில் முல்லை பெரி யாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுவதைத் தடுப்பது தொடர்பாக விவாதிக்க வரும் 26-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், அதற்கு கேரள அரசு ஆட்சேபம் தெரிவித்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டவுள்ளது. இந்நிலையில், நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த, மாநில அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்குப் பின் மாநில செய்தித்துறை அமைச்சர் கே.சி.ஜோசப் செய்தியாளர் களிடம் கூறியதாவது: அணை யின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதன் மூலம் வெள்ளப் பாதிப்பு ஏற்படலாம் என்று அப்பகுதி மக்களிடையே எழுந் துள்ள அச்சம் குறித்து இக்கூட் டத்தில் விவாதித்தோம். அதோடு, நீர்மட்டம் உயர்வதால் அணை யையொட்டி உள்ள வனப் பகுதிக்கும், விலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விவாதித்தோம். இது தொடர்பாக ஆய்வு செய்ய மாநிலத்தின் முதன்மை வனக்காப்பாளரை அணைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். நீர்மட்டம் உயர்த்தப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அவர் அறிக்கை அளிப்பார்.
இந்த விவகாரம் பற்றி விவாதிக்க வரும் 26-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தவுள்ளோம்.
அதோடு, இந்த விவகாரம் தொடர்பாக கேரள எம்.பி.க்கள் பங்கேற்ற கூட்டம் நடத் தப்பட்டுள்ளது. வரும் நாடாளு மன்றக் கூட்டத்தொடரின்போது, அணை தொடர்பாக கேரள அரசின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசிடம் எம்.பி.க்கள் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு கே.சி.ஜோசப் கூறினார்.