மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சிகள் தரப்பில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் மட்டுமே பங்கேற்றார்.
மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறும்போது, “சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங்குக்கும் விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தோம்” என்றார்.
இவ்விழாவில் பங்கேற்பது குறித்து காங்கிரஸ் தலைவர்களிட மிருந்து தகவல் ஏதேனும் வந்ததா என்று கேட்டபோது, அதற்கு பதிலளிக்க பியூஷ் கோயல் மறுத்துவிட்டார்.
- பிடிஐ