மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை வயல்வெளிகளில் நேரடி களப்பரிசோதனை செய்வ தற்கு மத்திய அரசோ அல்லது உச்ச நீதிமன்றமோ தடை விதிக்க வில்லை என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மக்களவையில் தெரிவித்தார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, இதுதொடர்பான கேள்விக்கு அமைச்சர் ஜவடேகர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
தேச நலன்கருதி அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கை களுடன் மரபணு மாற்ற பயிர் ஆய்வு மற்றும், நேரடி களப் பரிசோதனை செய்வதற்கு அனு மதிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய தேதி வரை, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை நேரடி களப்பரிசோதனை செய்வதற்கு மத்திய அரசோ, உச்ச நீதிமன்றமோ தடை விதிக்கவில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இவ்விவகாரம் தொடர்பாக 6 பேர் கொண்ட தொழில்நுட்ப நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு இரண்டு இறுதி அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளது.
5 உறுப்பினர்கள் இணைந்து ஒரு இறுதி அறிக்கையையும், 6-வது உறுப்பினரான ஆர்.எஸ். பரோடா மட்டும் தனியாக ஓர் இறுதி அறிக் கையையும் சமர்ப்பித்துள்ளனர்.
இரு அறிக்கைகளுமே, இந்தியா வில் உயிரி பாதுகாப்பு (பயோ- சேஃப்டி) ஒழுங்குமுறைகளை மேம் படுத்துவதற்கான ஆலோசனை களை அளித்துள்ளன. ஐவர் குழு அளித்துள்ள அறிக்கை, அனைத்து பரிந்துரைகளையும் அமல்படுத் தும் வரை மரபணு மாற்றப்பட்ட விதை நேரடி களப்பரிசோதனைக் கான அனுமதியை நிறுத்தி வைக்க பரிந்துரைத்துள்ளது. ஆறாவது உறுப்பினர், “ஜிஇஏசி குழு களப் பரிசோதனை தொடர்பாக அளித் துள்ள விதிமுறைகளே போது மானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து நேரடி களப்பரிசோ தனைகளுமே, கடுமையான விதி களுக்கு உட்பட்டே நடத்தப்படு கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய ஸ்வதேசி ஜக்ரான் மஞ்ச், பாரதிய கிசான் சங்கம் ஆகியவை இப் பரிசோதனைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி வரு கின்றன. இதுதொடர்பாக அச்சங்கங் களின் பிரதிநிதிகள் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை கடந்த ஜூலை மாதம் சந்தித்துப் பேசினர். அரிசி, கத்திரிக்காய், கடுகு, பருத்தி, கொண்டைக்கடலை ஆகியவற்றை நேரடி களப்பரிசோதனை செய்வதற்கு ஜிஇஏசி ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.