இந்தியா

நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? - குமாரசாமி ஆவேசம்

செய்திப்பிரிவு

நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும், அதற்கான தேவை என்ன உள்ளது என கர்நாடக முதல்வர் குமாரசாமி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் குமாரசாமி மீது அதிருப்தி அடைந்த  காங்கிரஸைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், மஜதவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள், 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் கடந்த 6-ம் தேதி  ராஜினாமா திடீரென ராஜினாமா செய்தனர். நேற்று மேலும் 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் அம்மாநிலத்தில் உச்சபட்ச அரசியல் சிக்கல் நிலவி வருகிறது.

கர்நாடக அரசியல் சிக்கல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் குமாரசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர் ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்ததாவது:

‘‘நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கான தேவை என்ன உள்ளது. கடந்த 2009- 2010-ம் ஆண்டுகளில் எடியூரப்பா என்ன செய்தார். அவருக்கு எதிராக 18 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆனால் அவர் ராஜினாமா செய்யவில்லை. ஆனால் தற்போது நான் மட்டும் ராஜினாமா செய்ய வேண்டுமா. வேண்டுமானால் எடியூரப்பா ராஜினாமா செய்யட்டும்’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT