இந்தியா

19 மாநிலங்கள், மதுரை உள்ளிட்ட 110 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று திடீர் ரெய்டு

பிடிஐ

ஊழல் தடுப்பு, ஆயுதக் கடத்தல், குற்ற நடவடிக்கையைத் தடுத்தல் ஆகியவை தொடர்பாக 19 மாநிலங்களில், 110 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி ரெய்டு நடத்தினார்கள்.

இந்த ரெய்டு தொடர்பாக இதுவரை 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ரெய்டு மும்பை, டெல்லி, சண்டிகர், ஜம்மு, ஸ்ரீநகர், புனே, ஜெய்ப்பூர், கோவா, ராய்ப்பூர், ஹைதராபாத், மதுரை, கொல்கத்தா, ரூர்கேலா, ராஞ்சி, போகாரோ, லக்னோ, கான்பூர் ஆகிய இடங்களிலும் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, பிஹார் ஆகிய மாநிலங்களிலும் இந்த ரெய்டு நடந்து வருகிறது.

இந்த ரெய்டு எதற்காக நடத்தப்பட்டது, ஏன் நடத்தப்பட்டது என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரபூர்வமான தகவல்களைத் தெரிவிக்க சிபிஐ மறுத்துவிட்டது. ஆனால், ஊழல் தடுப்பு, ஆயுதக் கடத்தல், குற்ற நடவடிக்கையைத் தடுத்தல் ஆகியவற்றுக்காக நடந்திருக்கலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரு வாரங்களில் நடத்தப்படும் 2-வது மிகப்பெரிய ரெய்டு இதுவாகும். கடந்த வாரம் வங்கி மோசடி தொடர்பாக அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் ரெய்டு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT