இந்தியா

ஜன் தன் வங்கிக் கணக்குகளின் டெபாசிட் தொகை ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியது

பிடிஐ

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஜன் தன் வங்கிக்கணக்குகளில் டெபாசிட் தொகையின் மதிப்பு ரூ.ஒரு லட்சம் கோடியைத் தாண்டியது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின், நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்கும் நோக்கில் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா(பிஎம்ஜேடிஒய்) எனும் திட்டத்தை கொண்டு வந்தது.

இந்த திட்டத்தின் கீழ் வங்கியில் கணக்கு தொடங்கும் மக்கள் குறைந்தபட்ச இருப்பு வைக்கத்த தேவையில்லை என்று கொண்டுவரப்பட்டது. இந்த வங்கிக்கணக்கிற்கு ரூபே டெபிட் கார்டும், கடன் வழங்கும்(ஓடி) வசதியும் வழங்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதிவரை ஜன் தன் வங்கிக் கணக்கில் 36.06 கோடி வங்கிக்கணக்குகள் இருக்கின்றன. ஜுன் 6-ம் தேதி நிலவரப்படி ரூ.99 லட்சத்து 232.71 கோடி இருந்தது. இது படிப்படியாக அதிகரித்து, கடந்த வாரம் ரூ.99 கோடியே 649.84 கோடியாக உயர்ந்தது.

இந்நிலையில், இம்மாதம் 3-ம் தேதி ஜன் தன் வங்கிக்கணக்குகளில் டெபாசிட் தொகை மதிப்பு ரூ.ஒரு லட்சத்து 495.94 கோடியா அதிகரித்து, வெற்றிகரமாக ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளது என நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்  தெரிவிக்கபட்டுள்ளது.

மாநிலங்களவையில் சமீபத்தில் நிதி அமைச்சகம் சார்பில் அளித்த அறிக்கையில், " ஜன் தன் வங்கிக்கணக்குகளில் பணம் இல்லாத வங்கிக்கணக்குகள் எண்ணிக்கை 5.10 கோடியில் இருந்து ரூ. 5.07 கோடியாகக் குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. 28.44 கோடி வங்கிக்கணக்குதாரருக்கு ரூபே டெபிட் கார்டு வழங்கப்பட்டுள்ளது

ஜன் தன் வங்கிக்கணக்கு வைத்திருப்போருக்கு விபத்துக்காப்பீடாக தொடக்கத்தில் ரூ.ஒரு லட்சம் இருந்தநிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதிக்குப்பின் ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வங்கிக்கணக்கில் குறைந்த இருப்பு வைத்து அதிகமாக கடன் பெற்றுக்கொள்ளும் வசதி ரூ.5ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்த கணக்கு வைத்திருப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் " எனத் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT