இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

செய்திப்பிரிவு

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அர்னியா பகுதியில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவன் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

இதற்கு, இந்திய தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமையன்றும் சம்பா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

அக்டோபர் முன் பாதியில், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர், 90 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT