இந்தியா

சாமியார் ராம்பால் இன்று ஆஜர்: ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு

செய்திப்பிரிவு

சாமியார் ராம்பால் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். இதனையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2006-ம் ஆண்டு நடந்த கொலை தொடர்பான வழக்கில் சாமியார் ராம்பால் கடந்த 19-ம் தேதி கைது செய்தது. நவம்பர் 20-ம் தேதி நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இன்று (நவம்பர் -28)- வுடன் ராம்பாலின் நீதிமன்றக் காவல் முடிவடைகிறது. இதனையடுத்து அவர் இன்று மீண்டும் ஆஜர் படுத்தப்படுகிறார்.

சாமியார் ஆஜர் படுத்தப்படுவதையொட்டி பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நீதிபதிகள் எம்.ஜெயபால். தர்ஷன் சிங் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னர் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக, ராம்பால் கைது செய்யப்பட்டபோது நடந்த சம்பவங்கள் தொடர்பான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

எனவே, இன்று போலீஸ் தரப்பில் ராம்பால் கைது சம்பவம் குறித்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராம்பால் கைதுக்கு முன்னர் போலீஸாருக்கும் சாமியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் ஒரு குழந்தை, 5 பெண்கள் என மொத்தம் 6 பேர் பலியாகினர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கலவரம் தொடர்பொஅசாமியாரின் ஆதரவாளர்கள் 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT