இந்தியா

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்திய லஷ்கர் தீவிரவாதி அபு இஸ்மாயிலை சல்லடை போட்டு தேடும் ராணுவ வீரர்கள்

பிடிஐ

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட அபு இஸ்மாயிலை ராணுவ வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

காஷ்மீரின் அனந்தநாக் மாவட் டத்தில் கடந்த திங்கள்கிழமை, அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 6 பெண்கள் உட்பட 7 பேர் பலியாகினர். இது தொடர்பாக புலனாய்வுத் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி உள்ளனர். தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டுள்ளனர். பல்வேறு கோணங்களில் நடத்திய ஆய்வில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் கமாண்டர் அபு இஸ்மாயில்தான், தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து காஷ்மீரில் ராணுவ வீரர்கள் ஒவ்வொரு இடமாகத் தேடி வருகின்றனர். குறிப்பாக தெற்கு காஷ்மீரில் வீடு வீடாக வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, ‘‘இந்த மாதத் தொடக்கத்தில் லஷ்கர் தீவிரவாதி பஷிர் லஷ்கரி, பாதுகாப்புப் படையினரின் என்கவுன்ட்டரில் இறந்தார். அத்துடன் ராணுவ நடவடிக்கை யில் லஷ்கர் தீவிரவாதிகள் பலர் பலியாகினர். அதற்கு பழி வாங்கவே அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது’’ என்றார்.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந் தவர் உட்பட லஷ்கர் அமைப்புடன் தொடர்புடைய 2 பேரை கடந்த திங்கள்கிழமைதான் போலீஸார் கைது செய்தனர். அன்றைய தினமே யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடந்தது. ஆனால், யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு லஷ்கர் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா கஸ்நவி கண்டனம் தெரிவித்தார். அவர் கூறும்போது, ‘‘அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இஸ்லாத் துக்கு எதிரானது. தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது’’ என்றார். ஆனால், தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதே லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கமாண்டர் அபு இஸ்மாயில் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்ககது.

SCROLL FOR NEXT