உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரபல டாக்டருக்கு, சிறையில் உள்ள கைதி ரூ.20 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தின் கோரக்பூர் தொகுதியில் தனியார் மருத்துவ மனையை நடத்தி வருபவர் டாக்டர் எஸ்.எஸ்.சாஹி. தியோ ரியா மாவட்ட சிறை கைதியான ராமாஷ்ரே யாதவ் என்பவர், கடந்த ஜூன் 28 மற்றும் 29-ம் தேதி டாக்டர் சாஹியை தொலை பேசியில் தொடர்புகொண்டு ரூ.20 லட்சம் வழங்கும்படி கேட்டுள் ளார். மேலும் தர மறுத்தால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சாஹி உடனடியாக போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சாஹிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஆதித்யநாத்துக்கு நெருக்க மான டாக்டரான சாஹிக்கு சிறையில் உள்ள கைதி மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.