இந்தியா

குடியரசு தலைவர் தேர்தலில் மார்க்கர் பேனா அறிமுகம்

செய்திப்பிரிவு

குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்பி., எம்எல்ஏக்கள் வாக்களிக்க முதல்முறையாக மார்க்கர் பேனா பயன்படுத்தப்பட உள்ளது.

கடந்த ஆண்டு ஹரியாணாவில் இருந்து மாநிலங்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில் பேனா மை விவகாரத்தால் 12 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரத்யேக மார்க்கர் பேனாவை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி கர்நாடக அரசின் கீழ் செயல்படும் ‘மைசூர் பெயிண்ட் அண்ட் வார்னிஷ்’ நிறுவனம் புதிய வகை மார்க்கர் பேனாக்களை தயார் செய்துள்ளது. இந்த பேனாக்களே குடியரசுத் தலைவர் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளன.

சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல் களின்போது பாட்டில் மையில் பிரஷை தோய்த்து வாக்காளர் விரலில் அடையாள மை வைக்கப்படுகிறது. இந்த நடை முறைக்கு மாற்றாக மார்க்கர் பேனா மூலம் மை வைக்க தேர்தல் ஆணையம் ஆலோசிப்ப தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

SCROLL FOR NEXT