உத்தரப் பிரதேசத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் அமர் சிங்கின் பெயர் இடம்பெறவில்லை. மாறாக ஆசம் கான் மனைவிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவைக்கு உ.பி.யிலிருந்து இந்த மாதம் காலியாக உள்ள 10 உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 20–ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஆறு வேட்பாளர்களின் பெயர்களை சமாஜ்வாதியின் மத்திய ஆட்சிமன்றக் குழு கூடி நேற்று முன்தினம் அறிவித்தது. இதில், முலாயம் சிங் சகோதரர் ராம்கோபால் யாதவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு நெருக்கமான ஜாவேத் அலி, உபியின் மூத்த அமைச்சர் ஆசம் கானின் மனைவி தஜீம் பாத்திமா, முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகர், முன்னாள் மக்களவை உறுப்பினர் ரவி பிரகாஷ் வர்மா, ஜான்சியைச் சேர்ந்த சந்திரபால் சிங் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
கடந்த முறை சமாஜ்வாதி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமர் சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. இவர் கடந்த ஜனவரி 2010-ல் கட்சியை விட்டு வெளியேறினார். பின்னர் இவர் முலாயம் சிங்கை மூன்று முறை சந்தித்துப் பேசினார். இதனால் அமர் சிங் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு, மாநிலங்களவை உறுப்பினர் பதவி மீண்டும் தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனினும், வேட்பாளர் அறிவிப்புக்குப் பின் முலாயம் சிங்குக்கு நன்றி தெரிவித்து ஆசம் கானின் மனைவி தஜீம் பாத்திமா வெளியிடப்பட்ட அறிக்
கையால் சிறிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதில், பொருத் தமான வேட்பாளர்கள் பெயர் எதுவும் விடுபட்டு இருந் தால் அவர்களுக்காக தனது வாய்ப்பை விட்டுத்தர தயாராக இருப்பதாகவும், இந்த விஷயத்தில் முலாயம் சிங் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், தஜீமுக்கு எதிராகக் கிளம்பும் விமர் சனங்களை சமாளிக் கவே இந்த அறிக்கை விடப்பட் டுள்ளதாக சிலரும், இந்த வாய்ப்பு அவரிடமிருந்து பறிக் கப்பட்டு அமர் சிங்குக்கு அளிக் கப்படலாம் என மற்றொரு தரப்பினரும் கருதுகின்றனர்.