இந்தியா

நிகழ்நேரப் பதிவு: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுக நிகழ்வு

செய்திப்பிரிவு

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிக்க வகை செய்யும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஜூன் 30 நள்ளிரவில் அமலானது. இதனால் பல்வேறு பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதுவரை 1,211 பொருட்களுக்கு வரி விகிதத்தை ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி செய்துள்ளது. பெரும்பான்மையான பொருட்களுக்கு 18 சதவீத வரி விகிதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த முழுமையான பதிவுகள்:

ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மைய மண்டபத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு முன்னர் 1997-ல் நள்ளிரவு நாடாளுமன்றம் கூடியது. சுதந்திரதின பொன்விழா கொண்டாட்டங்களுக்காக அப்போது கூடியது.

காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் திரிணமூல், திமுக, ராஷ்ட்ரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் நிகழ்ச்சியைப் புறக்கணித்தன.

(நிகழ்நேரப் பதிவு நிறைவு)

12 PM: பிரணாப் முகர்ஜி ஜிஎஸ்டி வரியை நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்தார். மணியடித்து ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை பிரணாப் அறிமுகப்படுத்தினார். இதனால் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது.

11.50 PM: ஜிஎஸ்டி உருவாக்கத்தில் நெருக்கமாக இருந்துள்ளேன். ஜிஎஸ்டி என்பது எப்படியும் அமலாகி விடும் என்பதை நான் அறிவேன் என்று பிரணாப் உரையாற்றினார். விரிவான செய்திக்கு: >இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சியை அறிவிக்கும் வெற்றி: ஜிஎஸ்டி-யை அறிமுகம் செய்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை

11. 22 PM: ஜிஎஸ்டி மூலம் இந்தியா புதிய பாதையில் பயணம் மேற்கொள்கிறது: மோடி பெருமிதம்

ஜிஎஸ்டி அறிமுக விழாவில் மோடி பேசியதாவது: வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் தருணம் வெற்றியின் மகுடம். கூட்டுறவு கூட்டாட்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்தியா.

மத்திய, மாநில அரசுகளை இணைத்து ஒரு குழுவாக காட்டுகிறது ஜிஎஸ்டி. பொருளாதார அமைப்பை முறைப்படுத்துவதில் ஜிஎஸ்டி முக்கியப் பங்கு வகிக்கிறது.

கீதையில் 18 அத்தியாயம் இருப்பது போல் 18 கூட்டங்களுக்குப் பிறகு ஜிஎஸ்டி அமலாகிறது. இதனால் 125 கோடி மக்களும் பயன்பெறுவர்.

இன்று இரவு, நள்ளிரவில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேசத்தை முன் நகர்த்துகிறோம். இன்னும் சிறிது நேரத்தில் நாடு புதிய திசையில் பயணிக்கவிருக்கிறது. 125 கோடி மக்களும் பயனடையும் திட்டம். பொருளாதாரத்துக்கு மட்டும் ஜிஎஸ்டி பயனளிக்கும் என்பதை நான் ஏற்கவில்லை. இந்தப் பாதை ஒரு கட்சி ஒரு அரசு தேர்ந்தெடுத்ததல்ல. இது பலரது கூட்டு முயற்சியில் உருவானது. நாடாளுமன்ற மத்திய மண்டபத்தில் நாம் ஒன்றிணைந்துள்ளோம். விரிவான செய்திக்கு: >புதிய இந்தியாவை வளர்த்தெடுக்க ஜிஎஸ்டி முக்கிய பங்காற்றும்: பிரதமர் நரேந்திர மோடி உரை

11.15PM: ஒரே இந்தியா ஒரே வரி என்ற நடைமுறைக்கு தேசம் மாறுகிறது: அருண் ஜேட்லி

நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி-யை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உரையாற்றும் போது ஒரே இந்தியா ஒரே வரி என்ற நடைமுறைக்கு தேசம் மாறுகிறது என்றார்.

அவர் மேலும் பேசும்போது, ''ஜிஎஸ்டி மூலம் இந்தியா வரலாற்றை உருவாக்குகிறது, இது ஒட்டுமொத்த தேசத்துக்கும் முக்கிய சாதனை. உலகம் மெதுவான வளர்ச்சியை சந்தித்து வரும் நிலையில் இந்திய அரசியலில் இது உச்சநிலை.

நள்ளிரவில் நாட்டின் மிகப்பெரிய சீர்த்திருத்தம் அமலாகவிருக்கிறது. இந்தப் பயணம் 2006-ல் தொடங்கியது. 2010-ல் ஜிஎஸ்டியை அமல்படுத்துவதாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தெரிவித்தது. பிரணாப் முகர்ஜி இன்று அதன் சாட்சியாக அமர்ந்திருக்கிறார்.

ஜிஎஸ்டி உருவாக்கத்தில் அனைத்து மாநிலங்களும் பங்களிப்புச் செய்துள்ளன. ஜிஎஸ்டியினால் நலிந்த பிரிவினருக்கு சுமை ஏற்படாது. 2003-ல் வாட் வரி என்ற ஒற்றை வரி முறை தொடங்கியது. சிறப்புக்குரிய வரித்திட்டம் நடைமுறைக்கு வர பாடுபட்ட அனைவருக்கும் நன்றி'' என்றார் அருண் ஜேட்லி.

10.55 PM: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வருகை.

10.50 PM: துணை குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரி வருகை

10.35 PM: பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற மத்திய மண்டபத்துக்கு வந்துவிட்டார். சுஷ்மா ஸ்வராஜ், அமித் ஷா, அருண் ஜேட்லி ஆகியோரும் உள்ளனர்.

9.45 PM: ஜிஎஸ்டி தொடர்பான சிக்கல்கள், தவறான புரிதல்களை களைய டெல்லி பாஜக, வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் உதவும் விதமாக முகாம்களை அமைக்கவுள்ளது. டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஜூலை 6-ம் தேதி தல்கதோரா மைதானத்தில் ஜிஎஸ்டி பற்றி விளக்குவார்கள்.

(ஜிஎஸ்டி அறிமுக நிகழ்ச்சிக்காக ஒளிமயப்படுத்தப்பட்ட நாடாளுமன்றம். | படம் : ஆர்.வி.மூர்த்தி.)


நிகழ்ச்சி நிரல் வருமாறு:


22.55: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்ற இல்லத்துக்கு வருகை

22.59: அறிவிப்பு.

23.00: பிரணாப் முகர்ஜி மைய மண்டபத்துக்கு வருகை, பிறகு தேசிய கீதம்.

23.02: நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் அறிமுக உரை.

23.10: ஜிஎஸ்டி பற்றிய படம்

23.15: பிரதமர் நரேந்திர மோடி உரை

23.45 குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை.

12.00AM: ஜிஎஸ்டி அறிமுகம்

12.05: பிரணாப் முகர்ஜி செல்கை.

உணவுப் பொருட்கள், பால்பவுடர், தயிர், மோர் உள்ளிட்ட பல பொருட்களின் விலை ஜிஎஸ்டியால் குறையும். விரிவான செய்திக்கு: >ஜிஎஸ்டி அமலால் விலை குறையும் பொருட்கள் என்னென்ன?- முழு பட்டியல்

ஜிஎஸ்டியை காரணம் காட்டி கூடுதல் தொகை வசூலிக்ககூடாது என கட்டுமான நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு: >ஜிஎஸ்டியை காரணம் காட்டி கூடுதல் தொகை வசூலிக்கக் கூடாது: தமிழக அரசு அறிவிப்பு

ஜிஎஸ்டி என்பதன் விரிவாக்கத்தை (முழு வார்த்தைகளை) உ.பி. அமைச்சர் ஒருவர் சொல்லத் தவறியது, யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு: >ஜிஎஸ்டி விரிவாக்கம்: சொல்லத் தவறிய உ.பி. அமைச்சர்

விவசாயிகள் நலன்களைக் காக்கும் விதமாக உரங்கள் மீதான ஜிஎஸ்டி 12% வரியை 5% ஆகக் குறைத்துள்ளது மத்திய அரசு. விரிவான செய்திக்கு: >உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12%-லிருந்து 5% ஆகக் குறைப்பு

ஜிஎஸ்டி தொடர்பாக வணிகர்களுக்கு எழும் சந்தேகங்களை 01204888999 மற்றும் 18001036751 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தமிழக வணிகவரித்துறை அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு: >ஜிஎஸ்டி சந்தேகங்களை நிவர்த்தி செய்ய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு

ஜிஎஸ்டி வரி அறிமுகத்தினால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 1-1.5% வரை வளர்ச்சியடையும் என்று கூறுவது ‘குப்பையான’ வாதம் என்கிறார் நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேப்ராய். விரிவான செய்திக்கு: >ஜிஎஸ்டி-யால் ஜிடிபி 1-1.5% வளர்ச்சியடையும் என்பது அபத்தமானது : நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேப்ராய் கருத்து

அவசர கதியில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமல் செய்யப்படுகிறது. இதன் அறிமுக நிகழ்ச்சியை மத்திய அரசு வேடிக்கை காட்சியாக்கி சுய விளம்பர நிகழ்ச்சியாக்குகிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். விரிவான செய்திக்கு: >அவசர கதியில் ஜிஎஸ்டி அமல் செய்யப்படுகிறது: ராகுல் தாக்கு

முந்தைய பதிவுகள்:

சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் குறித்து மாற்றுக் கருத்துகளைக் கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஜிஎஸ்ட் அறிமுக நிகழ்ச்சியைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார். விரிவான செய்திக்கு: >‘வரலாற்று’ ஜிஎஸ்டி வரி அறிமுக நிகழ்ச்சியைப் புறக்கணிக்கிறார் மம்தா பானர்ஜி

ஜூலை 1-ம் தேதி முதல் அமலாகும் சரக்கு மற்றும் சேவை வரி இந்தியாவின் பொருளாதாரச் சுதந்திரம் என்று அனில் அம்பானி தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு: >ஜிஎஸ்டி இந்தியாவின் பொருளாதாரச் சுதந்திரம்: அனில் அம்பானி புகழாரம்

வெள்ளி நள்ளிரவு நடைபெறும் ஜிஎஸ்டி அறிமுக நிகழ்ச்சியைப் புறக்கணிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சியினரை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி. விரிவான செய்திக்கு: >நள்ளிரவு ஜிஎஸ்டி அறிமுக நிகழ்ச்சியைப் புறக்கணிக்க வேண்டாம்: நிதியமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தல்

ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது என்பது குறித்து தெரிவிக்கும் வகையில் தற்போதே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. விரிவான செய்திக்கு: >ஜிஎஸ்டி வரிவிதிப்பால் உணவு விலை உயர்கிறது: ஹோட்டல்களில் தற்போதே அறிவிப்பு

எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் அமல்படுத்தப்படும் சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அதிமுக அரசு முழு பொறுப்பேற்று, மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியாக வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். விரிவான செய்திக்கு: >ஜிஎஸ்டி வரியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அதிமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்: ஸ்டாலின்

ஜிஎஸ்டி என்றால் என்ன?

நாடு சுதந்திரமடைந்தபிறகு வரி விதிப்பில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும். நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்:

* இது ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு விதிக்கப் படும் மறைமுக வரி விதிப்பாகும். இது நாடு முழுவதற்கும் ஒரே அளவாக இருக்கும். பல முன்னேறிய நாடுகள் இத்தகைய வரி விதிப்பு முறையைத்தான் பின்பற்றுகின்றன. உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகிய அனைத்துக்கும் ஒரே முனை வரி விதிப்பைக் கொண்ட ஒருங்கிணைந்த வரி விதிப்பாகும்.

* மத்திய அரசு விதிக்கும் உற்பத்தி வரி, சேவை வரி, உற் பத்தி மற்றும் சுங்கத்துறையில் விதிக்கப்படும் கூடுதல் வரி, சிறப்பு கூடுதல் சுங்க வரி, செஸ், சர்சார்ஜ் உள்ளிட்ட அனைத்து வரி விதிப்புகளும் நீக்கப்பட்டு ஒரு முனை வரியாக விதிக்கப் படும்.

* மாநில அரசு விதிக்கும் மதிப்பு கூட்டு வரி (வாட்) மத்திய வரி, வாங்கும்போது வரி, நுழைவு வரி, பொழுதுபோக்கு வரி, விளம்பரங்கள் மீதான வரி, லாட்டரி, பந்தயம், சூதாட்டம், மாநில அரசு விதிக்கும் பிற வரி விதிப்புகளுக்கு மாற்றாக இது அமையும்.

* அதிக வரிச் சுமையைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். பொதுவாக மத்திய, மாநில அரசுகள் பொருள் உற்பத்தி மதிப்பை அடிப்படை யாகக் கொண்டு வரி விதிப்ப தில்லை. இருப்பினும் பல்வேறு நிலைகளில் வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படும். இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத் தியை (ஜிடிபி) மறைமுகமாக பாதிக்கிறது. வரி ஏய்ப்பு, குறைந்த வரி ஆகியவற்றை தவிர்ப்பதோடு தொழில் புரிவதை எளிதாக்கும்.

* 2011-ம் ஆண்டு வடிவமைக் கப்பட்ட ஜிஎஸ்டி மசோதா வரை வில் கச்சா எண்ணெய், பெட் ரோல், டீசல், எரிவாயு, விமான எரிபொருள் மற்றும் மதுபானங் கள் ஜிஎஸ்டி வரி விதிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை.

* ஜிஎஸ்டி தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க ஜிஎஸ்டி சமரச தீர்வு ஆணையம் ஏற்படுத்தப்படும். மாநிலங்களுக்கு இப்புதிய வரி விதிப்பு முறையால் ஏற்படும் வரி வருவாய் இழப்பு குறித்து இது ஆராயும். ஆனால் 2014-ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தில் ஆணையத்துக்கு இத்தகைய அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது.

* 2014-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் மதுபான வகைகள் ஜிஎஸ்டி பட்டியலில் இடம்பெறவில்லை.

* மாநிலங்கள் சில முக்கிய பொருள்கள் மீது வரி விதிப்பைக் குறைக்கலாம் என 2011-ல் அளிக் கப்பட்ட விதி 2014-ல் மேற்கொள் ளப்பட்ட திருத்தத்தில் முற்றிலு மாக நீக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பிரிவில் எந்த உணவுப் பொருளும் இடம்பெற முடியாது.

* அதேபோல பஞ்சாயத்து மற்றும் முனிசிபாலிட்டிகளில் பொருள் நுழைவு வரி விதிக்கலாம் என்ற விதிமுறையும் 2014 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது.

SCROLL FOR NEXT