இந்தியா

குமரி மாவட்டம் குமாரகோவிலில் பெண் சார் ஆட்சியர் - கேரள எம்எல்ஏ காதல் திருமணம்

செய்திப்பிரிவு

கேரள காங்கிரஸ் எம்எல்ஏ சபரிநாதனுக்கும், திருவனந்தபுரம் சார் ஆட்சியர் திவ்யா எஸ்.அய்யருக்கும், கன்னியாகுமரி மாவட்டம், குமாரகோவில் முருகன் கோயிலில் நேற்று திருமணம் நடைபெற்றது.

கேரள மாநிலம் அருவிக்கரை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சபரிநாதன். இவருக்கும், திருவனந்தபுரம் சார் ஆட்சியர் திவ்யா எஸ்.அய்யருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் பெற்றோர் சம்மதத் துடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

கடந்த மாதம் இவர் களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது திருமணத்தை குமரி மாவட்டம், குமாரகோவிலில் உள்ள முருகன் கோயிலில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இவர்களது திருமணம் குமாரகோவில் முருகன் கோவிலில் நேற்று காலை நடந்தது. இதில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் பாலையா உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர், மணமக்கள் திருவனந்தபுரம் சென்றனர். வரவேற்பு நிகழ்ச்சி திருவனந்தபுரம் நாலாஞ்சிரையில் நேற்று மாலை நடைபெற்றது.

மறக்க முடியாத நாள்

மணமகன் சபரிநாதன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறும்போது, ``ஜூன் 30-ம் தேதிதான் என் வாழ் நாளில் மறக்க முடியாத பல சம்பவங்கள் நடந்துள்ளன. எனது திருமணம் நடந்ததுபோல ஜூன் 30-ம் தேதிதான் நான் எம்எல்ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப் பட்டேன். அதனால் இந்த 30-ம் தேதியை என்னால் மறக்க முடியாது.

நாங்கள் இருவரும் காதலித்த போது முருகன் - வள்ளியுடன் குடிகொண்டிருக்கும் கோயிலில் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தோம். அது பெற்றோர் விருப்பத்துடன் இன்று நிறைவேறி உள்ளது. இதற்காக எங்களோடு துணை நின்ற அனை வருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

கேரள காங்கிரஸ் எம்எல்ஏ சபரிநாதனுக்கும், திருவனந்தபுரம் சார் ஆட்சியர் திவ்யா எஸ்.அய்யருக்கும், கன்னியாகுமரி மாவட்டம், குமாரகோவில் முருகன் கோயிலில் நேற்று திருமணம் நடைபெற்றது. மணமகளுக்கு திருமாங்கல்யம் அணிவித்த மணமகன்.

SCROLL FOR NEXT