இந்தியா

லாலு மகள் மிசா பாரதிக்கு அமலாக்கத் துறை சம்மன்: விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

பிடிஐ

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ரூ.8 ஆயிரம் கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் மிசா பாரதி மற்றும் அவரது கணவர் சைலேஷ் குமாருக்கு உள்ள தொடர்பு குறித்து இவர் களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப் பட்டதை தொடர்ந்து இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதில் மிசா பாரதி, டெல்லி யில் விசாரணை அதிகாரி முன்னிலையில் இன்று (ஜூலை 11) ஆஜராகும்படி உத்தரவிடப் பட்டுள்ளது. மிசா பாரதியின் தனிப்பட்ட நிதிப் பரிவர்த்தனை உட்பட சில வகை ஆவணங்களை கொண்டுவரும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதி காரிகள் கூறினர்.

மிசா பாரதியின் கணவர் சைலேஷ் குமாரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

போலி நிறுவனங்கள் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர் பாக டெல்லியில் மிசா பாரதி தம்பதியருக்கு சொந்தமான 3 வீடுகள் மற்றும் ஒரு நிறுவனத்தில் அமலாக்கத்துறை கடந்த 8-ம் தேதி சோதனை நடத்தியது. ஊழல் வழக்கில் லாலு குடும்பத்தினருக்கு சொந்தமான 12 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியதற்கு மறுநாள் இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மிசா பாரதியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தவுள்ளது.

SCROLL FOR NEXT