இந்தியா

ரயில்வே முன்னாள் அமைச்சர் லாலு வீட்டில் சிபிஐ சோதனை: மனைவி, மகன் மீது வழக்கு

பிடிஐ

ரயில்வே முன்னாள் அமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் வீடு, உறவினர்கள் வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.

ரயில்வே துறையின் பாரம்பரிய ஓடல்களான பிஎன்ஆர் ஓட்டல்களை மேம்படுத்த ஒப்பந்தம் கோரியதில் முறைகேடு நடந்ததாக லாலு பிரசாத் யாதவின் குடும்ப உறுப்பினர்கள் இல்லத்தில் சிபிஐ சோதனை நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

யார் யார் மீது வழக்கு?

லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, பிஹார் துணை முதல்வரும் லாலுவின் மகனுமாக தேஜஸ்வி, ஐஆர்சிடிசி முன்னாள் நிர்வாக இயக்குநர் பி.கே.கோயல், லாலுவின் நெருங்கிய நண்பரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிரேம் சந்த் குப்தாவின் மனைவி சுஜாதா ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

டெல்லி, பாட்னா, ராஞ்சி, புரி, குர்கான் உட்பட 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT