இந்தியா

முகேஷ் அம்பானியின் பங்களாவில் திடீர் தீ

பிடிஐ

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஆடம்பர பங்களாவில் நேற்றிரவு திடீரென தீப்பற்றியது.

தொழிலதிபர் முகேஷ் அம்பானி தெற்கு மும்பையின் அல்டாமவுன்ட் சாலையில் ஆடம்பர பங்களாவை கட்டி வசித்து வருகிறார். இந்த கட்டிடம் உலகளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தக் கட்டிடத்தில் 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். மொத்தம் 173 மீட்டர் உயரமுள்ள இந்த கட்டிடம் 27 மாடிகளைக் கொண்டது.

இந்நிலையில் முகேஷ் அம்பானி பங்களாவின் 6-வது மாடியில் நேற்றிரவு 9.10 மணிக்கு தீப்பற்றியது. தகவல் அறிந்தவுடன் 6 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர் என்று மும்பை மாநகராட்சி பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறிது நேரத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக போலீஸ் பிஆர்ஓ ராஷ்மி கரந்திகர் கூறினார். மேற்கொண்டு சேத விவரங்கள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

SCROLL FOR NEXT