இந்தியா

கடந்த 20 ஆண்டுகளில் 2,700 வீரர்கள் உட்பட மாவோயிஸ்ட் தாக்குதலில் 12,000 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

மாவோயிஸ்ட் தீவிரவாதத்தால் கடந்த 20 ஆண்டுகளில் இந்தி யாவில் 2,700 பாதுகாப்பு வீரர்கள் உட்பட 12 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரி வித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரம்:

கடந்த 20 ஆண்டுகளில் மாவோயிஸ்ட் தீவிரவாதத் தால் 2,700 பாதுகாப்புப் படை வீரர்களும் 9,300 அப்பாவி பொது மக்களும் கொல்லப்பட்டுள் ளனர் வீரர்களுக்கு அவ்வப்போது பின்னடைவுகள் இருந்த போதிலும் கடந்த 3 ஆண்டுகளில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் 25 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த 2011 மே - 2014 ஏப்ரல் மாதம் வரையிலான சம்பவங் களை ஒப்பிடும்போது, கடந்த 2014 மே முதல் 2017-ம் ஆண்டு ஏப்ரல் வரை இடதுசாரி தீவிரவாதம் 25 சதவீதம் குறைந்திருப்ப துடன், வீரர்களின் உயிரிழப்பு களும் 42 சதவீதம் குறைந் துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் தண்டே வாடாவில் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரலில் நிகழ்த்தப்பட்ட தாக்கு தலில் 75 வீரர்கள் உயிரிழந்தனர். அதன் பின்னர் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 25 பேர் உயிரிழந்தனர்.

அதேநேரம் மாவோயிஸ்ட் களின் எண்ணிக்கையை குறைப் பது 65 சதவீதமும், சரணடையும் எண்ணிக்கை 185 சதவீதமும் அதிகரித்துள்ளது. 10 மாநிலங் களில் உள்ள 68 மாவட்டங்களில் கண்டறியப்பட்ட மாவோயிஸ்ட் களின் நடமாட்டமானது 35 மாவட்டங்களில் தற்போது 90 சதவீதம் குறைந்துள்ளது.

மாவோயிஸ்ட்களை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மலைப்பாங்கான, அடர்ந்த வனப் பகுதிகளில் 1,391 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் 5,412 கிலோ மீட்டர் சாலை போடும் பணிக்கு அனுமதி வழங்கப்பட் டுள்ளது. அடர்ந்த கிராமப் பகுதிகளில் தகவல் தொடர்புக்காக 2,187 மொபைல் டவர்கள் அமைக் கப்பட்டுள்ளன. மேலும் 2,882 டவர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாவோயிஸ்ட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட 35 மாவட்டங்களில் 358 வங்கிகளும், 752 ஏடிஎம் மையங்களும் ஏற்படுத்தப்பட் டுள்ளன. 1,789 தபால் அலுவல கங்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT