காற்றாடி பறக்க விடுவதற்கு சிலர் மாஞ்சா நூலைப் பயன்படுத்து கின்றனர். மாஞ்சா நூல்கள் உறுதியாக இருப்பதற்காக வஜ்ரம், கலர் பொடி, கண்ணாடி துகள்கள், கந்தகம், துத்தநாகம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. மாஞ்சா நூல்கள் மின் கம்பங்களில் சிக்கும்போது, அவ்வழியே செல்வோர் மற்றும் காற்றாடி விடுவோர் மீது மின்சாரம் பாயும் ஆபத்து உள்ளது. பறவைகள், விலங்குகளும் இதனால் உயிரிழக்க வாய்ப்புள்ளது. மேலும் வாகனங்களில் செல்வோருக்கு இந்த நூல் எமனாக மாறிவிடு கிறது. எனவே மாஞ்சா நூலைத் தடை செய்யக் கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பீட்டா அமைப்பைச் சேர்ந்த காலித் அஷ்ரப் உள்ளிட்ட சிலர் மனுத் தாக்கல் செய்தனர்.
“மாஞ்சா நூல் தயாரிப்பது குடிசைத் தொழிலாக நடைபெறு கிறது. இத்தொழிலில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர் களுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன” என்றும் இவர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (என்ஜிடி) நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நாடு முழுவதும் மாஞ்சா நூல் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக என்ஜிடி தலை வர் நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு பிறப் பித்த உத்தரவில், “காற்றாடி விடு வதற்கு பயன்படுத்தப்படும் மாஞ்சா அல்லது நைலான் நூல் மற்றும் அனைத்து செயற்கை இழை நூல்களின் உற்பத்தி மற்றும் விற்பனையையும் இவை இருப்பு வைக்கப்படுவதையும் அனைத்து மாநில அரசுகளும் தடுக்க வேண் டும். அனைத்து மாநிலங்கள் மற் றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் இந்த தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும்” என்று கூறப் பட்டுள்ளது.