இந்தியா

ஜிஎஸ்டியால் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்: பண்டாரு தத்தாத்ரேயா தகவல்

செய்திப்பிரிவு

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டிருப்பதால் முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டிருப்பதால் முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். தவிர கணக்குப்பதிவியல் துறையில் 60,000 வேலை வாய்ப்புகள் உருவாகும். சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது இந்திய வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகும்.

ஜிஎஸ்டியால் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயரும். முக்கிய பொருட்களை விலை குறைவதால் பணவீக்கம் குறையும்'' என தத்தாத்ரேயா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT