திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மலைப்பாதை வழியாக நடந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்கு நாளை முதல் தினமும் 20 ஆயிரம் திவ்ய தரிசன டோக்கன் மட்டுமே வழங்கப்பட உள்ளது.
தினமும் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பக்தர்கள் மலைப்பாதை வழியாக நடந்து சென்றதால், தினமும் ரூ.10.5 லட்சம் கூடுதல் செலவு ஏற்பபடுவதாக தேவஸ் தானம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மலைப் பாதை வழியாக சென்று தரிசனம் செய்யும் முறைக்கு தேவஸ் தானம் தடை விதிக்க முடிவு செய்தது. இதற்கு பக்தர் களிடையே கடும் எதிர்ப்பு கிளம் பியது.
இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, தினமும் 20,000 திவ்ய தரிசன டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.